#எனதுகுப்பை_எனதுபொறுப்பு ...
All Events

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி, ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (04.04.2023) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப.,அவர்கள், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சௌந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.த.ராஜேந்திரன், முக்கிய பிரமுகர் திரு.வைரமணி, மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் மரு.டி.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.இ.அருண்ராஜ், மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட குதுப்பாபள்ளம் மற்றும் மேலப்புதூர் பகுதிகளில் தலா 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப.,அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 2023-2024 வரவு செலவு திட்ட மதிப்பீடு மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் திரு. த. முத்துச்செல்வன் அவர்கள் மாமன்ற கூட்டம் அறையில் மாண்புமிகு மேயர் திரு. மு. அன்பழகன் அவர்களிடம் இன்று (29.03.2023) தாக்கல் செய்தார்கள். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப.,அவர்கள், துணை மேயர் திருமதி. ஜி. .திவ்யா அவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐந்து மண்டலத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி திருவானைக்கோயில் சென்னை ட்ரங்க் ரோடு பேருந்து நிலையம் முதல் சென்னை புறவழிச்சாலை வரையிலான சாலைகளின் மையப் பகுதிகளில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூபாய் 88.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 150 வாட்ஸ் திறன் கொண்ட 56 ஹெரிடேஜ் வகையிலான மின்சார சேமிப்பு எல்இடி விளக்குகள் செயல்பாட்டினை இன்று (18.03.2023) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா பிரதீப்குமார் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு இரா. வைத்திநாதன். இ.ஆ.ப., அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி அவர்கள், நகரப்பொறியாளர்(பொ.) திரு. சிவபாதம் அவர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் இன்று (15.03.2023) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பிராட்டியூர் குளத்தில் முட்செடிகளை அகற்றி தூர்வாரும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

Hon’ble Minister for Municipal Administration, Urban and Water Supply Department, Thiru. K.N.Nehru awarded Dr.R.Vaithinathan I.A.S., Commissioner, Tiruchirapalli City Corporation, with ‘Clean City Award’ for the best performance in Intercity Competition on Overall Cleanliness under Swachh Bharat Mission 2.0, on 08.03.2023 at Chennai.

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி பாலத்தின் பராமரிப்புப் பணிகள் முடிவுற்றதையொட்டி, பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக காவிரி பாலத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.03.2023) கொடியசைத்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள், மத்திய மண்டல காவல் துறை தலைவர் திரு.க.கார்த்திகேயன்,இ.கா.ப., திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திருமதி.எம்.சத்தியப்பிரியா,இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப., திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவண சுந்தர், இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜீத்குமார்,இ.கா.ப., காவல் துணை ஆணையர் திரு.வி.அன்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சௌந்திரபாண்டியன், திரு.செ.ஸ்டாலின் குமார், திரு.எம்.பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.த.இராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.கிருஷ்ணசாமி, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர்; (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.கேசவன், உதவி கோட்ட பொறியாளர் திரு.புகழேந்தி, உதவி பொறியாளர் திரு.கண்ணன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.